Loading

ஞாயிறு, 8 மே, 2011

சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா பணிவாய்ப்பு


சிமென்ட் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும் நோக்கத்தில் 1965ல் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் நிறுவப்பட்ட சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (சி.சி.ஐ.,) நிறுவனம் இத்துறையில் மிகவும் பெயர் பெற்றது. ரூ.900/ கோடி முதலீட்டை தற்சமயம் கொண்டுள்ள சி.சி.ஐ., நிறுவனத்தில் 7 பிரிவுகளில் மொத்தம் 21 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.




என்னென்ன பிரிவுகள்

சி.சி.ஐ.,யில் மெக்கானிகல் இன்ஜினியரிங் பிரிவில் 8 இடங்களும், எலக்ட்ரிகல் இன்ஸ்ட்ரூமெண்டேஷன் மற்றும் ஜியாலஜி மைனிங்பிரிவுகளில் 3 இடங்களும், கெமிக்கல் புரொடக்சன் பிரிவில் 5 இடங்களும், மனித வளத்தில் 2 இடங்களும், நிதியில் 3 இடங்களும், மார்க்கெடிங் பிரிவில் ஒரு இடமும் நிரப்பப்பட உள்ளன.

என்ன தேவை
இந்தப் பதவிகளில் இன்ஜினியரிங் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க அதிக பட்சம் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பிற பிரிவுகளுக்கு அதிக பட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

இன்ஜினியரிங் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தொடர்புடைய துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பிற பதவிகளுக்கு அந்தந்த துறைக்கேற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முழு விபரங்களுக்கு இணைய தளத்தைப் பார்க்கவும்.

இதர விபரங்கள்

சிமென்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு குழு விவாதம் மற்றும் நேர்காணல் என்ற அடிப்படைகளில் தேர்ச்சி இருக்கும். இவற்றில் வெற்றி பெறுபவர்கள் ஒரு ஆண்டு கால பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதன் பின்னர் நிரந்தரமாகப் பணியில் அமரலாம். பணியில் சேர்பவர்கள் 2 ஆண்டு பிணைய ஒப்பந்தத்தில் கையொப்பமிட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

சி.சி.ஐ.,யின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ.500/க்கான டி.டி.,யை "Corporation of India Limited" என்ற பெயரில் புது டில்லியில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. விண்ணப்பிப்பது குறித்த முழு விபரங்களை அறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும். விண்ணப்பிக்க இறுதி நாள்: 16.05.2011

இணையதள முகவரி: http://www.cementcorporation.co.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக