அசாம் போலீஸ் தேர்வில் மோசடி: 27 போலீஸ் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்; சி.பி.ஐ. தகவல்
அசாமில் கடந்த 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை போலீஸ் வேலைக்கு ஆள் தேர்வு செய்ததில் மோசடி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரூ.19 கோடி ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டது. தற்போது இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்பட 27 போலீஸ் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இன்னும் ஒரு வாரத்தில் இது தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக