Loading

வியாழன், 19 மே, 2011

ஹஜ் பயணிகளை தேர்வுசெய்ய குலுக்கல் சென்னையில் 24-ந் தேதி நடக்கிறது


தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்காக 10,477 பேர் தமிழகம் முழுவதும் விண்ணப்பித்துள்ளார்கள். மும்பை மத்திய ஹஜ் குழுவின் அறிவுரைப்படி, புனித பயணிகளை தேர்வுசெய்ய மாவட்ட வாரியாக குலுக்கல் நடத்த தமிழ்நாடு மாநில ஹஜ் குழு முடிவு செய்துள்ளது. இந்த குலுக்கல் நிகழ்ச்சி 24-ந் தேதி காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி ஆனைக்கார் அப்துல் ஷுக்கூர் கலையரங்கில் நடைபெறுகிறது. மாநில ஹஜ் குழு மூலமாக விண்ணப்பித்துள்ள புனித பயணிகள் இதில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக