Loading

வியாழன், 12 மே, 2011

20 மணி நேரம் கடுமையா உழைக்கிறேன்! நித்யானந்தா!!


நித்யானந்தா பழனியில் உள்ள ஆசிரமத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், சித்த வைத்தியம் உலக அளவில் பிரபலமாகி உள்ளது.

மேலும் சித்த வைத்தியத்தை அறிவியல் பூர்வமாக பிரபலபடுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதி முதல் உலகம் முழுவதும் சித்த வைத்தியத்தை பிரபலபடுத்த ஏற்பாடு செய்யப்படும்.

உலகம் முழுவதும் 40 இடங்களில் 18 சித்தர்களுக்கு சிலை வைக்கப்படும். தமிழ்நாட்டில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதுபோல மன அழுத்தத்தில் அதிகம் பேர் உள்ளனர்.



தமிழ்நாட்டில் இளைஞர்கள் அதிகம் பேர் மது குடிக்கிறார்கள். இதனால் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும்’’ என்று கூறினார். அவர் மேலும், என் மீது 5 நாடுகளில் 100 வழக்குகள் போடப்பட்டுள்ளது.

இதில் 99 வழக்குகள் டிஸ்மிஸ் ஆகிவிட்டது. ஒரு வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது. இதற்கு காரணம் அரசியல், பணம், கருத்து வேறுபாடு தான். என் மீது போடப்பட்ட வழக்கால் எந்த பாதிப்பும் கிடையாது. நானும் எனது சீடர்களும் 20 மணி நேரம் உழைக்கிறோம். அதனால் எங்களுக்கு பணம் கிடைக்கிறது’’ என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக