
12-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த அப்போதைய மந்திரி மம்தா பானர்ஜி ஏராளமான சலுகைகளை அறிவித்தார். குறிப்பாக பெண்களுக்கு அவர் பல்வேறு சலுகைகளை கொடுத்தார். ரெயிலில் பயணம் செய்யும் வயதானவர்கள் மூத்த குடிமக்கள் என்ற பிரிவில் கட்டண சலுகை பெற்று வருகிறார்கள்.
இதற்கான வயது வரம்பு 60 ஆக இருந்தது. பெண்களுக்கு இந்த வயது வரம்பை மம்தா பானர்ஜி 58 ஆக குறைத்தார். அதோடு கட்டண சலுகையையும் அவர் அதிகரித்தார். பெண் பயணிகள் முன்பு 30 சதவீத கட்டண சலுகை பெற்று இருந்தனர். அதை மம்தா பானர்ஜி 50 சதவீதமாக உயர்த்தியுள்ளார்.
எனவே இனி பெண் மூத்த குடிமக்கள் ரெயிலில் பயணம் செய்ய மொத்த கட்டணத்தில் பாதி பணம் கொடுத்தால் போதும். ஆண் மூத்த குடிமக்களுக்கு வயது வரம்பை மம்தா பானர்ஜி குறைக்கவில்லை என்றாலும் கட்டண சலுகையை 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தி உள்ளார்.
இந்த கட்டண சலுகைகள் வருகிற 1-ந்தேதி (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. 1-ந்தேதி முதல் முன் பதிவு செய்பவர்களுக்குத்தான் இந்த கட்டண சலுகை வழங்கப்படும். ஜூன் 1-ந்தேதிக்கு பிறகு பயணம் செய்வதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தால், இந்த கட்டண சலுகை கிடையாது என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக