Loading

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

கிறிஸ்தவ மிசனரிகளும் இஸ்லாத்தின் வாளும்



கிறிஸ்தவ மிசனரிகள் - இலங்கையைப் போல் இந்தியாவிலும் கையை நீட்டுமா 

 


கிறிஸ்தவம் மதிப்பிற்குரிய உலகின் பழைய மார்க்கங்களில் ஒன்று. இதை யாரும் மறுப்பதற்கில்லை. சிலுவையின் பெயரால் நடாத்தப்பட்ட நடாத்தப்படும் வேலைத்திட்ங்களில் ஒரு பகுதியாவது யேசுவின் பெயரால் நடாத்தப்படுவதில்லை. யேசுவிற்கு மார்க்கம். சிலுவைக்கு அரசியல். இவ்வாறு தான் இன்று பங்குகள் ஒப்புக்கொடுக்கப் படுகின்றன.
 

கிறிஸ்தவ மிசனரிகள் இலங்கையில் போர்த்துக்கேயர் காலத்திலேயே அறிமுகமாகின. முதலில் மதத்தின் பால் அழைத்தனர். பின்பு மத மாற்றம் செய்தனர். எது எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம். இந்த சொல்லை நாம் அடிக்கடி கேட்டுள்ளோம். இது மதந்தாண்டிய தீவிரவாதம். தமது மதத்தின் எல்லைகளைத் தாண்டி மாற்று மதத்தின் மேல் இராஜதந்திர ரீதியிலான செயல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.


இலங்கை முஸ்லிம்களிடையே குறிப்பாய் மத்தியதர இளைஞர்களிடையே ஒரு புதிய பழக்கம் வேர்விட்டுள்ளது. தமது வாகனங்களில் லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்ததுர் ரஸுலில்லாஹ் எனும் அராபிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் முன்புரமும் பின்புரமும் ஒட்டப்படுகின்றன.
அந்த அராபிய எழுத்தின் கீழே தடித்த ஒரு நீண்ட வாள் காணப்படுகிறது.
இலங்கை 

பிரச்சனை இங்கு தான் ஆரம்பிக்கிறது. இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என பல ஆண்டுகளாக கிறிஸதவ தீவிரவாத அமைப்புக்களாளும் ஹிந்து காவி படையாலும் பரப்பப்பட்ட விசமத்தனமான பொய் பிரச்சாரத்தை உண்மைப் படுத்துவது போல் இது உள்ளது.

சவுதி அரேபியாவின் அரச சின்னமாக வாள் காணப்படுகிறது. இரண்டு வாட்களின் நடுவே ஒரு பேரீத்த மரம் காணப்படுகிறது. அரபு எழுத்துக்களின் கீழேயும் வாள் காணப்படுகிறது. உண்மை. அது அவர்களுடைய தேசிய அடையாளம். இலங்கைக்கு சிங்கம் போல. இந்தியாவிற்கு ராட்டினம் போல. அமெரிக்காவிற்கு கழுகுத்தலை போல. அவ்வளவு தான்.

கிறிஸ்தவ மிசனரி அமைப்பினர் பல்லாயிரக்கணக்கான மேற்படி ஸ்டிக்கர்களை அடித்து அதை முஸ்லிம்கள் மத்தியில் தந்திரமாக விநியோகிக்கின்றனர். அதை இவர்களும் மார்க்கப் பற்றாக கருதி ஒட்டி வலம் வருகின்றனர். இதை முதலாவது வாங்கி ஒட்டுவது முட்டாள் முல்லாக்கள் என்பது வேறுவிடயம்.

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்பதை விட மிகப்பயங்கரமான ஒரு விடயம் இதில் பதுங்கியுள்ளது. அதுதான் முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் எனும் அமெரிக்க ஸியோனிஸ சக்திகளால் வடிவமைக்கப்பட்ட எண்ணக்கருவை சாதாரண சிங்கள மக்கள் வரை உளவியல் ரீதியாக கொண்டு செல்வதாகும். இதன் விளைவாக முஸ்லிம்கள் எல்லோரையும் ஜிஹாதிகளாக பார்க்கும் மனோபாவம் வலுப்பெறும்.

இதற்கு பின்னால் சி.ஐ.ஏ. நிற்கிறது. நாளை இதை இந்தியாவரை அகட்டும்போது ரோ நிற்கும். காவிப்படை நிற்கும். அத்வானி நிற்பான். நரேந்திர மோடி நிற்பான். விளைவு. ஏற்கனவே மொகாலேயரால் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மதம் என பட்டி தொட்டி எங்கும் ஏக பிரசித்தம். இப்போது இவர்கள் ஒட்டும் ஸ்டிக்கர் மேனியாவின் ஊடாக முஸ்லிம் என்றால் தீவிரவாதி. அடிப்படைவாதி. சகிப்புத்தன்மைக்கு எதிரானவன் எனும் எண்ணக்கரு புற்று நோய் போல வளர வாய்ப்புக்கள் அதிகம்.

கிறிஸ்தவ மிசனரிகளின் போர்வையில் இந்த சதிகாரக் கும்பல் அரங்கேற்றும் நாடகங்கள் பற்பல. இலங்கை பாகிஸ்தான் போட்டியில் இலங்கை தோற்கும் தருவாயில் கொழும்பில் பல்லாயிரக்கணக்கான பட்டாசுகளை இலவசமாக முஸ்லிம்களிடையே விநியோகித்து மறைந்து விடுவார்கள் இவர்கள். விளைவு சிங்களவர்களின் சீற்றமும்  இனவாதமும் பல்கிப் பெருகும்.

இன்று இலங்கையில் நடப்பது நாளை இந்தியாவிலும் நடக்கும். இலங்கை ஒரு பரீ்ட்சார்த்தக் களம் மட்டுமே. நாளை இந்திய பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ஜெயிக்கும் தறுவாயில் பம்பாய் முஸ்லிம்களிடமும் விநியோகிக்கப்படலாம். பம்பாயில் ஐ.எஸ்.ஐ வைக்கும் குண்டுகளைவிட வீரியமிக்கவை இந்து பட்டாசுகள். வகுப்புவாதம் தீ சுவாலையாக பற்றும்.

தேசிய ரீதியாக முஸ்லிம்கள் தொடர்பான தப்பான பார்வை உருவான பின் அவர்கள் மீது எந்தவிதமான காட்டுத்தனமான நடவடிக்கைகளை ஏற்படுத்தினாலும் யாரும் ஏன் என்று கூட கேட்க மாட்டார்கள். நாயை அடித்துக் கொன்றால் அது தவறு. மிருக வதை. வெறி நாயை யாரும் விரும்பியவாறு அடித்துக் கொள்ளலாம். யாரும் கேட்கப்போவதில்லை. இப்போது புரிகிறதா ?

இலங்கை இந்திய முஸ்லிம்களே இது உங்களிற்கான எச்சரிக்கை. விழிப்புடன் இருங்கள். உங்களை அழிக்க கிறிஸ்தவ மிசனரியல்ல உண்மையில் களம் புகுவது அமெரிக்கா. ஸியோனிஸம். கூடவே லோக்கல் இனவாதிகள். இது வெறும் ஊகம் அல்ல. நிஜமான வார்த்தைகள். நாம் விழித்துக்கொள்ள வேண்டிய வேளை இது.
கைபர் தளத்தி்ற்காக - அபூ ஆசியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக