Loading

வியாழன், 7 ஏப்ரல், 2011

வாக்களிக்க விருப்பமில்லை எனக்கூறும் 49 ஓ பிரிவை விளம்பரப்படுத்த வேண்டும்


தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை எனக் கூறும் 49 ஓ பிரிவு பற்றி பரவலாக விளம்பரப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்திய சந்திரன் உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

 அப்போது வழக்கறிஞர் சத்திய சந்திரன் கூறியது:

 இந்தத் தேர்தலில் 49 ஓ பிரிவு பற்றி பரவலாக விளம்பரப்படுத்தவில்லை. தேர்தல் ஆணையம் மெüனமாக இருக்கிறது.

 எனவே, தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் 49 ஓ பிரிவு பற்றி பரவலாக விளம்பரப்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

 தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜகோபாலன் பதிலளிக்கையில், கடந்த தேர்தலைப் போலவே இந்தத் தேர்தலிலும் 49 ஓ பற்றி விளம்பரப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எல்லா வாக்குச் சாவடிகளிலும் அதற்கான படிவங்கள் உள்ளன என்றார்.

 இதையடுத்து, 49 ஓ பற்றி தேர்தல் ஆணையம் ஏற்கனவே எடுத்த நடவடிக்கைகளுடன், அது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழ், ஆங்கில நாளிதழ்களில் மாநிலம் முழுவதும் விளம்பரப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

1 கருத்து:

  1. i agree with you. My opinion is to include 49-O button in the voting machine itself. As voting is secret, so is 49-O. http://kaatraadi.blogspot.com/2008/12/blog-post_23.html

    பதிலளிநீக்கு