Loading

சனி, 30 ஏப்ரல், 2011

அமெரிக்காவில் சூறாவளி புயலுக்கு 300 பேர் பலி;அவசர நிலை பிரகடனம்



அமெரிக்காவில் தெற்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக கடுமையான சூறாவளி புயல் வீசி வருகிறது. இதனால், அலபாமா, அர்கன்காஸ், கென்டுகி, மிசிசிப்பி, மிசோரி, டென்னிசீ, டெக்காஸ் உள்ளிட்ட மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கடும் காற்று சுழன்று வீசுவதால் அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின.


சுனாமி போன்று காற்று வீசுவதால் ரோட்டில் சென்று கொண்டிருந்த மற்றும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. இதனால் அவை ஒன்றுடன் ஒன்று மோதி சிதறி கிடக்கின்றன. இந்த சூறாவளி புயலில் அலபாமா மாகாணம் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இங்கு மட்டும் சுமார் 162 பேர் உயிரிழந்துள்ளனர். 150 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அலபாமாவில் துஸ்காலீ சியா நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.மின்சாரம் தடைபட்டுள்ளது. குடிநீரின்றி மக்கள் தவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக