Loading

ஞாயிறு, 13 மார்ச், 2011

இரண்டாவது அணு றீஅக்டரும் வெடித்தது மூன்றாவதும் தயார்!


ஜப்பானின் புக்குசீமா அணு உலையின் இரண்டாவது றீஅக்டரும் நேற்று சனிக்கிழமை வெடித்துச் சிதறியது. இதனால் ஜப்பானிய அரசு அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் பத்துக்கிலோ மீட்டர் தொலைவிற்கு மக்களை அகற்றியவர்கள் இன்றோ இருபது கி.மீ ஆரை கொண்ட வட்டத்திற்கு மக்களை அகன்று போகச் சொல்லியுள்ளனர். அதேவேளை சற்று முன் மூன்றாவது றீஅக்டரும் வெடிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டேனிஸ் அணுசக்தி நிபுணர் இதுபற்றிக் கூறும்போது இது மிகப்பெரும் அதிர்ஸ்டக்குறைவான நிகழ்வு என்கிறார்கள். மேலும் வெடிப்பு நடைபெற்றுள்ள இடம் எதுவென்பது இப்போது தெளிவாகியுள்ளது.
அணுசக்தியை டம்பண்ணி வைத்திருந்த இடத்திலேயே வெடிப்பு நடைபெற்றுள்ளது. இது வெடிப்பு நடைபெறக் கூடாத மோசமான இடமாகும். இது மற்றைய இடங்களையும் வெடிக்கப்பண்ணும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை பிந்திய கணிப்பின்படி ஜப்பான் சுனாமியில் இதுவரை 10.000 பேர்வரை இறந்திருக்கலாம் என்று ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை ஜப்பானின் வடக்குப் பகுதி நோக்கி புகைப்படம் எடுக்கச் சென்ற டேனிஸ் புகைப்படக்காரர் அப்பகுதிகள் முற்றாக வெறிச்சோடிக் கிடப்பதாகவும் மீட்புப் பணிகள் பல இடங்களை சென்றடையவில்லை என்கிறார்கள். அதேவேளை டோக்கியோ நோக்கி பெருந்தொகையான மக்கள் படையெடுப்பதாகவும் இன்னொரு செய்தி கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக