Loading

செவ்வாய், 29 மார்ச், 2011

பத்தாயிரம் கோடி ரூபாவுக்கு மேல் இடம்பெறும் கிரிக்கெட் சூதாட்டம்!


உலகக் கோப்பை தொடங்கிய போது தென்ஆப்பிரிக்கா கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக சூதாட்டம் நடந்தது. கால் இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா தோல்வி அடைந்ததும், சூதாட்டக்காரர்கள் அதிர்ச்சிக்கும் தவிப்புக்கும் உள்ளானார்கள்.

இந்த நிலையில் தற்போது இந்தியாவை மையமாக வைத்து கிரிக்கெட் சூதாட்டம் களை கட்டி உள்ளது. நாளை அரை இறுதியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதில் பல நூறு கோடி ரூபாய் வாரி இறைக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் உலகம் முழுக்க 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஓவரிலும், ஒவ்வொரு பந்திலும் எத்தனை ரன் கிடைக்கும் என்று கூட சூதாட்டம் நடக்கிறது.

அது போல நாளைய ஆட்டத்தின் போது முனாப்படேல், சோயிப் அக்தர் எத்தனை விக்கெட் எடுப்பார்கள் என்றும் சூதாட்டம் நடக்கிறது. இதையடுத்து இரு அணி வீரர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களை பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக