Loading

சனி, 19 மார்ச், 2011

இன்று தாக்குதல் ஆரம்பமாகும் லீனா எஸ்பர்சன்

கடாபியின் படைகள் பெங்காஸிக்குள் நுழைந்துவிட்டன. பெங்காஸி நகரின் சகல இடங்களிலும் மின்னல் வேகத்தில் மோதல் நடைபெறுகிறது. இந்த நிலையில் நாளை காலை வரை தாமதிக்க இடமில்லாத நெருக்குவாரத்திற்குள் மேலைநாட்டு விமானங்கள் தள்ளப்பட்டுள்ளன. இன்று மாலையே அவசர அவசரமாக டேனிஸ் விமானங்கள் தாக்குதலை ஆரம்பிக்கும் என்று டேனிஸ் வெளிநாட்டு அமைச்சர் லீனா எஸ்பர்சன் சற்று முன்னர் தெரிவித்தார்
. இதேவேளை சற்று முன் கருத்துரைத்த கேணல் கடாபி லிபிய மக்கள் தன் பக்கம் நிற்பதாகவும் ஐ.நாவின் பிரேரணை செல்லுபடியாகாது என்றும் கூறினார். மேலும் அவர் கடைசித் தடவையாக மேலைநாடுகளுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்ததோடு, தனது விவகாரங்களில் யாரும் வீணாகத் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுள்ளார். இது குறித்து பிரிட்டன் பிரதமருக்கு அவருடைய மகன் அவசர கடிதம் ஒன்றும் அனுப்பியுள்ளார். இது இவ்விதமிருக்க டேனிஸ் பிரதமர் – கிளரி கிளின்டன், அஞ்சலா மார்க்கல், ஸார்க்கோஸி, பலர்ஸ்கோனி, அரபுலீக், சீன பிரதிநிதிகள், சவுதி வெளிநாட்டு அமைச்சர் சகிதம் மாநாடு ஆரம்பித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆபிரிக்க யூனியன் பங்கேற்கவில்லை. வரும் இரண்டு மணி நேரங்கள் மேலை நாடுகளின் தலைவர்களின் முக்கிய முடிவு வெளியாகும். இந்த நிலையிலேயே இன்று மாலையே தாக்குதல் நடக்கும் என்ற அறிவிப்பை டேனிஸ் வெளிநாட்டு அமைச்சர் சற்று முன் விடுத்தார். யாருடைய பேச்சையும் கடாபி காது கொடுத்து கேட்பதாக இல்லை என்றும் மேலைத்தேய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடாபி மேலை நாடுகளுக்கு கடும் பாடம் கற்பிக்க தயாராகிவிட்டதையே அவருடைய கடைசி எத்தனங்கள் காட்டுகின்றன. அதேவேளை போராளிகள் தரப்பில் இருந்து பாரிய தாக்குதல் இப்போது நடைபெறவில்லை. சர்வதேச சமுதாயம் தலையிடுவதால் போராளிகள் மெல்லிய பின்வாங்களை செய்வதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. அதேவேளை மக்கள் அங்கிருந்து ஓடத் தொடங்கியுள்ளார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக