Loading

ஞாயிறு, 20 மார்ச், 2011

லிபியா மீதான மேற்குலக படையெடுப்புக்கு சீனா, ரஷ்யா கவலை


நேற்று சனிக்கிழமை தொடக்கம் லிபியா மீது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் விமானங்கள்
நடத்தி வரும் தாக்குதலுக்கு சீனா தனது கவலையை வெளியிட்டுள்ளது. சீன வெளியுறவு அமைச்சகம் இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில்
லிபியாவில் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்களை தொடர்ந்து அவதானித்துவருகிறோம். அந்நாட்டு சுதந்திரம், மற்றும் இறையாண்மையை நாங்கள் மதிக்கிறோம். அந்நாட்டின் மீது அமெரிக்க, பிரான்ஸ் விமானங்கள் தாக்குதல் நடத்தியது எமக்கு பெரும் வருத்தமளிப்பதாக உள்ளது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.
இதனடையே ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் லிபியா மீதான தாக்குதலை, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்க படைகள் இன்றும் தாக்குதல் : 14 கடாபி இராணுவத்தினர் பலி?!
இதேவேளை அமெரிக்க – பிரான்ஸ் கூட்டுப்படை தற்போது கடாபியின் தரைப்படை மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெங்காஷி மற்றும் அஜ்டபியா நகரங்களில் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில்,
கடாபி இராணுவத்தினர் 14 பேர் பலியாகியிருப்பதாகவும் பல ஆயுத வாகனங்கள் வெடித்து சிதறியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று மிஷ்ராட்டா, பெங்ஆஷி, திரிபொலி நகரங்களுக்கு அண்மையில் அவை தாக்குதல் நடத்தியிருந்தன.
லிபியாவை காப்பாற்ற மக்கள் தொடர்ந்து போராடுவார்கள் : கடாபி சூளுரை!
எறிகணைத்தாக்குதல் நடத்தி என் நாட்டு மக்களை கொல்வதற்கு புதிய நாஷிப்படைகள் களமிறங்கியுள்ளதாக கடாபி கடும் கோபத்துடன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை அவர் இவ் உரையை வெளியிட்ட போதும், தொலைக்காட்சிகளில் அது ஒளிபரப்படவில்லை. தான் இருக்கும் இடத்தை கூட்டுப்படைகள் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதில் கடாபி மும்முரமாக உள்ளார்.
மிஷாராட்டா நகரில், இராணுவ தாங்கிகளை கொண்டு, கடாபி இராணுவம் அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை கூட்டுப்படைகளின் விமானங்களை கண்டு லிபிய மக்கள் பலர் உற்சாக கரகோசம் அளித்துள்ள போதும், கடாபிக்கும் இன்னமும் இது கோபத்தை ஏற்படுத்திவிடும் செயல் என்பதால் அவர்கள் கவலை அடைந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.
காடாபி தனது உரையில், அமெரிக்காவை வன்மையாக கண்டித்து பேசியுள்ளார். வியட்னாம், ஈராக், சோமாலியா என அமெரிக்காவின் ஆதிக்கம் இப்போது எமது நாட்டுக்குள்ளும் வரபார்க்கிறது. நீங்கள் கற்றுக்கொள்ளவில்லை. நீங்கள் அழியப்போகிறீர்கள் என கூறினார்.
கிறிஸ்த்தவ மேலாதிக்கத்துக்கு எதிராக, இஸ்லாமிய நாடுகள் போராடும் தருணமிது.லிபியாவை காப்பாற்ற அனைத்து பொதுமக்களும் ஒன்றிணைந்து போராடுவார்கள். வீரமரணம் அடைவார்கள். ஆனால் இறுதிவரை இவ் யுத்தத்தில் பின் வாங்க போவதில்லை என அவர் தெரிவித்தார்.
இதேவேளை அல்ஜசீரா தொலைக்காட்சியின் நான்கு ஊடகவியலாளர்களை கடாபி இராணுவம் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக, அதன் இணைய தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

1 கருத்து:

  1. கிறிஸ்தவ ஏகாதிபத்திய நாடுகள் மற்றைய நாடுகளை வலிய யுத்தத்துக்கு அழைத்து அழிக்க முயலும் சரித்திரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

    1930களில் யப்பான் பெற்றோலியம், இறப்பர், தாதுப் பொருட்கள் போன்றவற்றை இறக்குமதி செய்ய இங்கிலாந்தும் அமெரிக்காவும் தடை விதித்து, அதன் மூலம் யப்பானை வலிந்து யுத்தத்துக்கு அழைத்து, இறுதியில் யப்பான் மீது அணுகுண்டுகளை வீசி யப்பானை அழித்தனர். ஆனால் அதிலிருந்து யப்பான் மீண்டுள் தளைத்து உலகின் பெரிய பொருளாதார தொழில்நுட்ப நாடாக மலர்ந்தது.

    தற்போது சீனாவின் பெற்றோலிய தேவைகட்கு தடைகளை ஏற்படுத்து சீனாவை யுத்தத்துக்கு அமெரிக்கா வலிய அழைக்கிறது. லிபியாவின் கிழக்கு பகுதியில் இருக்கும் சீனாவின் உதவியோடு தற்போது நடக்கும் பெற்றோலிய அகழ்வுகளை நிறுத்தி சீனாவுக்கும் லிபியாவுக்கும் இடையேயான பெற்றோலிய ஏற்றுமதி உடன்படிக்கைகளை ரத்து செய்யவே தற்போது லிபியா மீது தாக்குதல்களை அமெரிக்கா நடாத்துகின்றது.

    ஈரானுக்கும் சீனாவுக்கும் இடையேயான பெற்றோலிய ஏற்றுமதி உடன்படிக்கைகளை ரத்து செய்யவே ஈரான் மீதும் தாகுதல்களை மேற்கொள்ள அமெரிக்கா முஸ்தீபுகளை செய்து வருகின்றது.

    ஆனால் 1930களில் யப்பானை போருக்கு வலிய இங்கிலாந்தும் அமெரிக்காவும் அழைத்த போது யப்பானிடம் அணுகுண்டு இருக்க வில்லை. ஆனால் தற்போது சீனாவிடம் அணுகுண்டுகளும் உண்டும். அண்மையில் பாரிய ஹைட்ரஜன் குண்டு ஒன்றை சீனா வெற்றிகரமாக பரிசோதித்தது இங்கு குறிப்பிடத்தக்கது

    பதிலளிநீக்கு