இந்த நிகழ்வில் ராக்கட்டின் மைய அணுக்கரு வெடிக்கவில்லை, அருகாமையில் நடைபெற்ற பிரின், ஒட்சிசன் கலவையே வெப்பமேறி வெடித்தது, அணுக்கரு பகுதி சிறிய அளவே சேதமடைந்துள்ளது. அதன் பாதிப்பு பற்றியே அச்சம் நிலவுகிறது. மேலும் இத்தகைய அணு நிலையங்கள் குளிர்மைப்படுத்துவதற்காக கடற்கரையை அண்டி இருப்பது வழமை.
இதன் காரணமாகவே சுனாமியால் பாதிக்கப்பட்டது. சுனாமி குளிர்மைப்படுத்தும் கட்டமைவை உடைத்த காரணத்தால் உருவாகிய அளவு மீறிய வெப்பமே விபத்துக்குக் காரணமாகும். இதனால் றீஅக்டர்கள் உருகி வெடித்துள்ளன. இந்த வெடிப்பால் ஏற்பட்ட பாதிப்புக்கள் சீர் செய்யப்படும்வரை சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் வீடுகளை பூட்டியபடி இருக்க வேண்டும்.
தற்போது வெளியேறிய புகை காற்றின் விரைவைப் பொறுத்து நூற்றுக்கணக்கான கி.மீ தூரம் பரவுவதை யாராலும் தடுக்க முடியாது. ஜப்பானின் அணுக்கரு மையம் வெடிக்காது என்று நம்பப்படுவதால் பாரிய பாதிப்பு இல்லை. ரஸ்யாவில் முன்னர் ஏற்பட்ட வெடிப்புடன் ஒப்பிட்டால் ஜப்பானில் ஏற்பட்டுள்ள கசிவின் அளவு குறைவாகவே உள்ளது. கடலில் உள்ள மீன்கள் அணுக்கசிவில் பாதிக்கப்பட்டால் அவை பல நாடுகளுக்கும் பரவும் அது உணவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் முதற் கட்ட செய்திகள் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக