ராமேஸ்வரம்: சேது சமுத்திர சேது சமுத்திர திட்டப் பணிக்காக கோட்டைப்பட்டினம் கடற்பகுதியில் 14 மாதங்களாக நடந்த ஆய்வு நேற்று முடிந்தது. ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட நவீன கருவி ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டது.
ராமேஸ்வரம், கோட்டைப்பட்டினம் கடற்பகுதியில் சேது சமுத்திர திட்ட பணிக்காக கடந்த 14 மாதங்களாக சிறப்பு ஆய்வுகள் நடந்து வந்தன. கோவாவில் இருந்து அதிநவீன ஆய்வுக்கருவி கொண்டு வரப்பட்டு, இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடலின் தன்மை, மணல், உப்பு குறித்து இந்தக் கருவி ஆய்வு நடத்தியது. ஆய்வுப்பணி நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து, கடலுக்குள் ஆய்வு நடத்திய நவீன கருவி ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து சேது சமுத்திர திட்ட தொழில்நுட்ப உதவியாளர் சிங் கூறுகையில், ‘‘14 மாதங்களாக கடலில் நடத்திய ஆய்வு குறித்த அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிப்போம்.
அரசு உத்தரவுப்படி அடுத்தகட்ட ஆய்வில் ஈடுபடுவோம்’’ என்றார்.
செய்தி :- Dinakaran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக