ஜி – 20 நாடுகளின் பிரதிநிதிகளின் கவனத்திற்கு உலக வங்கி வழங்கியுள்ள முக்கிய விவகாரம் இன்றைய உணவுப் பொருள் விலையேற்றமாகும். கடந்த யூன் மாதம் ஆரம்பித்த கடும் உலக உணவுப் பொருள் விலையேற்றம் தற்போது 44 மில்லியன் மக்களை வறுமைக்குழிக்குள் வீழ்த்தியுள்ளது. இது மேலும் தொடரப்போகிறது என்ற கடும் எச்சரிக்கையை அது வழங்கியுள்ளது.
இரண்டாவது முக்கிய விடயம் இன்று மத்திய கிழக்கு, வடக்கு ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் ஆர்பாட்டத்தைத் தூண்டிவிட்டுள்ள விடயம் வறுமையும் வேலை இன்மையுமே என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளது. ஆகவே இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம் பல அரசுகளின் இற்றுப்போன நாற்காலிகளை முறித்தெறியப் போவதும் ஜி – 20 ல் உணரப்படுகிறது. இதனால் வரப்போகும் நெருக்கடிகளை எப்படிச் சீர் செய்யலாம்..?
மூன்றாவது முக்கிய விடயம் கடந்த வாரம் உலகப் பொருளாதாரத்தில் ஜப்பானை முந்திக் கொண்டு சீனா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள செய்தி வந்துள்ளது. இன்றைய மாநாட்டில் சீனாவிற்கு ஆதரவளிக்கும் போக்கில் இருந்து விலகி ரஸ்யாவும், பிரேசிலும் அமெரிக்க வர்த்தகத்திற்கு ஆதரவாக திசை மாறுகின்றன. ஆகவே இனி சீனா தனது வர்த்தகத்தை தானே தனியனாக வளர்க்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
சீனாவின் தனிமை பல நாடுகளில் சிக்கலை உருவாக்கும்…
எகிப்து உட்பட பல நாடுகளில் ஏற்படும் ஆட்சி மாற்றங்கள் இன்றைய ஜி -20 நாடுகளுக்கு பலத்த நஷ்டங்களை ஏற்படுத்தும் அதற்கான புது வழியையும் தேட வேண்டியுள்ளது.
அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் தனது அங்கத்துவ நாடுகளில் ஏற்பட்டுள்ள வறுமையைப் போக்குவதற்கு 500 மில்லியாட் குறோணரை வழங்கி பாதுகாப்பு நெற் ஒன்றைப் போடப்போகிறது. இருந்தாலும் ஐரோப்பிய பொருளாதாரம் தனது சொந்தக் காலில் நிற்க வேண்டுமென சுவீடன் நாட்டு பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய கருத்துக்கள் தொடர ஜி – 20 மாநாடு தொடர்ந்து நடைபெறுகிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக