Loading

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

ப ஜா.,வின் புது உத்தி, பயன் அடையப்போவது யாரோ?



ராமநாதபுரம் : தேர்தல் முன்னிட்டு பா.ஜ., கட்சியினர் மொபைல்போன் மூலம், மக்களின் கருத்துகளை கேட்கும் விதமாக பா.ஜ., எஸ்.எம்.எஸ், குழுமத்தில் சேர அழைப்பு விடுத்து வருகின்றனர்.

தேர்தல் நெருங்கினாலே அனைத்து கட்சிகளும் ஒவ்வொரு விதமாக தங்களுடைய பிரசாரத்தை துவங்கிவிடுவது வழக்கமான ஒன்று. தற்போது தேர்தல் தேதியே அறிவிக்காத நிலையில், பா.ஜ.,வினர் மொபைல் போன்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பி வருகின்றனர். அதில் ""நேரம் வந்துவிட்டது விழித்தெழுங்கள், பா.ஜ., எஸ்.எம்.எஸ்., குழுமத்தில் சேர உங்களை வரவேற்கிறோம்.உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி மாற்றங்களை ஏற்படுத்துங்கள்'' என அனுப்பி வருகின்றனர். 

பா.ஜ.,வின் எஸ்.எம்.எஸ்., விளம்பரத்தை தொடர்ந்து மற்ற கட்சியினரும் இலவசம், ஊழல், போன்ற தகவல்களை தெரிவித்து யாருக்கு உங்கள் ஓட்டு என, விளம்பரப்படுத்த தயாராகி வருகின்றனர். இது போன்ற எஸ்.எம்.எஸ்., தொந்தரவால் பொது மக்களின் நிலை தான் பரிதாபமாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக