விக்கிலீக் அதிபர் அசான்ஜுக்கு முறைகேடான உறவுகள் மூலம் பல நாடுகளிலும் 4 குழந்தைகள் உள்ளதாக அவருடன் பணியாற்றியவர் எழுதியுள்ள புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
உலக நாடுகள் விஷயங்களில் அமெரிக்க வெளியுறவுத்துறையின் சுமார் 1 லட்சம் கேபிள் தகவல்களை வெளியிட்டும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் மற்றும் ஜெர்மன் வங்கிகளில் முடக்கி வைத்து கள்ளப் பணம் தொடர்பாகவும் விவரங்களையும் வெளியிட்டும் வருபவர் விக்கிலீக் இணைய தளத்தின் நிறுவனர் அதிபர் ஜுலியன் அசான்ஜ் (39).
அமெரிக்க ராணுவ, வெளியுறவு ரகசியங்கள், இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களின் ரகசிய ஆவணங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இதையடுத்து இவர் மீது கற்பழிப்பு வழக்குகளைப் போட்டு முடக்க சில நாடுகள் முயன்றன. இதற்கு அமெரிக்காவும் உதவியது.
சமீபத்தில் சூடானில் 2 பெண்களை இவர் கற்பழித்ததாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.
இந் நிலையில் ஜுலியன் குறித்து அவரது இணையத் தளத்தில் பணிபுரிந்த முன்னாள் செய்தி தொடர்பாளர் டேனியல் டொம்ஸ்சிட் பெர்க் ‘Inside WikiLeaks: My Time with Julian Assange at the World’s Most Dangerous Website’ என்ற புத்தகம் எழுதியுள்ளார். அதில், அசாங்கேவுக்கு உலகம் முழுவதும் பல காதலிகள் உள்ளனர். அவர்கள் மூலம் அவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
எங்களுடன் அமர்ந்து பேசுகையில், நான் உலகின் பல நாடுகளிலும் பல குழந்தைகளுக்கு தகப்பன். இதுவரை 4 கண்டங்களில் 4 குழந்தைகளுக்கு தகப்பனாகிவிட்டேன். இன்னும் பல நாடுகளிலும் குழந்தைகளுக்கு நான் தகப்பன் ஆக வேண்டு்ம் என்பது என்று ஜூலியன் கூறுவார்.
தனக்கு 22 வயதுக்குள்ளான இளம் பெண்களே பிடிக்கும். அதிலும் புத்திசாலியான, அதே நேரத்தில் அதிகம் கேள்வி கேட்காத பெண்களையே பிடிக்கும் என்பார் ஜூலியன் என்று தனது புத்தகத்தில் கூறியுள்ளார் டேனியல்.
விரைவில் வெளியாகவுள்ள இந்தப் புத்தகத்தில் ஜூலியன் குறித்து மேலும் ஏராளமான தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக