ஜெருசலத்தை யூதர்களிடம் அடகுவைக்க ஒருபோதும் முஸ்லிம்களால் இயலாது என யு.ஏ.இயின் அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸய்யத் அல் நஹ்யான் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய நாடுகளுக்கான கூட்டமைப்பான ஒ.ஐ.சியின் இண்டர் பார்லிமெண்ட் யூனியனில் ஷேக் கலீஃபாவின் உரையை யு.ஏ.இ சுப்ரீம் கவுன்சில் உறுப்பினரும் ராஸல்கைமா ஆட்சியாளருமான ஷேக் ஸவூத் பின் ஸகர் அல்காஸிமி வாசித்தார்.
ஜெருசலத்திற்கு தூதரகத்தை மாற்றுவது இஸ்ரேலை ஆதரிப்பதற்கு சமமாகும். இத்தகைய முயற்சிகளை நடத்தும் நாடுகள் மீது யு.ஏ.இ நிர்பந்தம் அளிக்கும்.
1967-ஆம் ஆண்டு நடந்த போரில் இஸ்ரேல் அபகரித்த கிழக்கு ஜெருசலம் உள்ளிட்ட பிரதேசங்கள் ஃபலஸ்தீனுக்கு சொந்தமானது என்ற ஓ.ஐ.சியைப் போலவே யு.ஏ.இயும் அங்கீகரித்துள்ளது.
சர்வதேச சட்டத்தின்படி இது முஸ்லிம்களுக்கு சொந்தமானது. இந்த சட்டத்தை காற்றில் பறத்திவிட்டு இஸ்ரேல் ஜெருசலத்தில் யூதர்களை குடியமர்த்தி வருகிறது. ஐக்கியநாடுகள் சபை ஃபலஸ்தீனை சுதந்திரநாடாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
ஃபலஸ்தீனில் குறிப்பாக காஸ்ஸா முனையில் இஸ்ரேல் நடத்தும் அட்டூழியத்தை ஒ.ஐ.சி பார்லிமெண்ட் கண்டித்தது. காஸ்ஸாவில் ஏராளமான நிரபராதிகளை கொன்றுகுவித்த இஸ்ரேல் அதிகாரிகளை போர் குற்றவாளிகளாக அறிவித்து விசாரணைச் செய்யவேண்டும்.
இஸ்லாத்தை பயங்கரவாதமாக சித்தரிக்கும் (இஸ்லாமோ ஃபோபியா) மேற்கத்திய நாடுகளுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ள ஒ.ஐ.சியிடம் யு.ஏ.இ கோரிக்கை விடுத்தது. ஒ.ஐ.சியின் இண்டர் பார்லிமெண்ட் கடந்த செவ்வாய்க்கிழமை துவங்கியது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக