மாலேகான் : மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் கூடுதல் கலெக்டர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். கலெக்டர் யஷ்வந்த் சோனாவானே பெட்ரோல் பதுக்கல்காரர்கள் இடத்தில் திடீர் சோதனை நடத்த சென்றார். அப்போது அவரை 6 முதல் 7 பேர் தீவைத்துக் கொன்றனர்.
இந்த கொடூரச் செயலை பெட்ரோல் மற்றும் டீசல் பதுக்குபவர்கள் தான் செய்துள்ளனர். கலெக்டரை எரித்தவுடன் குற்றவாளிகள் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிவிட்டனர். போலீசார் அவர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.
மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ளது மாலேகான். அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த சோனாவானே ஏதோ சந்தேகத்தின் பேரில் அந்தப் பகுதியில் தனது காரில் இருந்து கீழே இறங்கியுள்ளார். போலீஸ் பாதுகாப்பின்றி தனது உதவியாளருடன் திடீர் என்று சோதனை நடத்த வந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மண்ணெண்ணெய் மாபியா கும்பல் அவரைத் தாக்கியுள்ளது. பின்னர் அவரை உயிரோடு எரித்துக் கொன்றது.
சோனாவானே கடமை தவறாத நேர்மையான அதிகாரி என்று பெயர் எடுத்தவர்.
இந்த சம்பவம் குறி்த்து மஹாராஷ்ட்ரா முதல்வர் பிரித்விராஜ் சவான் அதிர்ச்சி கலந்த வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார். இது தொடர்பாக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில பொதுப் பணித் துறை அமைச்சர் சகன் புஜ்பல் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக