Loading

புதன், 5 ஜனவரி, 2011

காவி பயங்கரவாதம்:முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது - ப.சிதம்பரம்

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் குண்டுவெடிப்பை கச்சிதமாக நிறைவேற்றிய காவி பயங்கரவாதிகளின் பின்னணிக் குறித்த முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


ஆனால்,அதனைக் குறித்த விபரங்களை தற்போது வெளியிட இயலாது என பத்திரிகையாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் ஆர்.எஸ்.எஸ்ஸின் மூத்த தலைவர்களின் பங்கினைக் குறித்து முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே நல்லுறவை சீர்குலைக்க இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டிருக்கலாம் என முன்னரே சந்தேகம் நிலவியது.

கடந்த 2008 பிப்ரவரி 17-ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் வைத்து நடந்த இந்தக் குண்டுவெடிப்பில் 68பேர் கொல்லப்பட்டிருந்தனர். தேசிய புலனாய்வு ஏஜன்சி இவ்வழக்கை விசாரித்து வருகிறது.

முக்கிய முன்னேற்றம் இவ்விசாரணையில் ஏற்பட்ட பொழுதிலும், இந்தியாவில் நடந்த இதர குண்டுவெடிப்புகளில் இதன் தொடர்புக் குறித்து விசாரிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

மலேகான் குண்டுவெடிப்புக் குற்றவாளி கர்னல் புரோகித் மூலமாக வெடிப்பொருள் கொண்டுவரப்பட்டதாக தகவல் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக