அல்ஜீர்ஸ்,ஜன.23:அல்ஜீரியாவின் தலைநகரான அல்ஜீர்ஸில் ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஏராளமானோருக்கு காயமேற்பட்டது
.'ராலி ஃபார் கல்சர்' என்ற அமைப்பு அரசுக்கெதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இவ்வமைப்பின் ஏராளமான தலைவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். அரசு தடையை எதிர்த்து ஏராளமானோர் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
1992 ஆம் ஆண்டு முதல் அல்ஜீரியாவில் அவசரச் சட்டம் அமுலில் உள்ளது. விலைவாசி உயர்வுக்கும், வேலைவாய்ப்பின்மைக்கும் எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட துணிந்துள்ளனர். போராட்டத்திற்கு பல்வேறு மாணவர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
செய்தி:மாத்யமம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக