Loading

வியாழன், 20 ஜனவரி, 2011

பாகிஸ்தானில் பலத்த பூகம்பம்

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான தல்பந்தினில் பலத்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 80 கிலோமீட்டர் ஆழத்தில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டதால் அதிக அளவில் சேதமில்லை.

ஆப்கான், ஈரான் எல்லைப் பிரதேசத்தில்தான் பூகம்பம் உருவாகியுள்ளது. 84 கிலோமீட்டர் தொலைவு வரை பூகம்பம் உணரப்பட்டதாக அமெரிக்க ஜியோலஜிக்கல் சர்வே தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சி டெல்லி, ராஜஸ்தான், அரியானா, உ.பியின் மேற்கு பகுதி, துபாய், கத்தர் ஆகிய இடங்களிலும் உணரப்பட்டது. ஆனால் சேதங்கள் ஏற்படவில்லை. பூகம்பர் உருவான இடத்தின் 55 கி.மீ சுற்றளவு தூரத்தில் 15 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக