Loading

சனி, 1 ஜனவரி, 2011

மக்கா மஸ்ஜித்:முஸ்லிம் போராட்டக்காரர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்போகும் ஆந்திர அரசு

முஸ்லிம் போராட்டக்காரர்கள் மீது ஆந்திர பிரதேச அரசு சுமத்திய வழக்குகளை வாபஸ் பெறப்போகிறது.

தனி தெலுங்கானா மாநிலம் கேட்டுப் போராடியவர்கள் மீதான 1667 வழக்குகளை வாபஸ் பெறப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என நம்பத் தகுந்த அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கடந்த 2007 ஆம் ஆண்டு மக்கா மஸ்தில் நடந்த குண்டுவெடிப்புத் தொடர்பாக வீதியில் இறங்கிப் போராடிய முஸ்லிம்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகளைத்தான் வாபஸ் பெற ஆந்திர மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பை முஸ்லிம் இளைஞர்கள் திட்டமிட்டு நிகழ்த்தியதாக முதலில் போலீஸ் கூறியது. பின்னர் சி.பி.ஐ விசாரணையில் குண்டுவெடிப்பை திட்டமிட்டு நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் என தெரியவந்தது.

குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை போலீஸ் கைதுச் செய்திருந்தது. முஸ்லிம் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது போலீஸ்.

செய்தி:மாத்யமம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக