Loading

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

ஆண்டுதோறும் 40 ஆயிரம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிப்பு

வேலூர் சி.எம்.சி.யில் குழந்தைகளுக்கான நோய்கள் என்ற தலைப்பில் குளிர்கால கருத்தரங்கு நடந்தது.
அதில், குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள் குறித்தும் அவற்றை குணப்படுத்தும் சிகிச்சை குறித்தும் விவாதிக்கப்பட்டது
.

அப்போது இந்தியாவில் ஆண்டுதோறும் 40 ஆயிரம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், குழந்தைகளுக்கு ஏற்படும் இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அவற்றை குணப்படுத்த முடிவதில்லை. ஏனெனில் பொருளாதார பற்றாக்குறையே இதற்குக் காரணமாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறினர். வளர்ந்த நாடுகளில் 20 சதவிகிதமும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 80 சதவிகிதம் குழந்தைகளுக்கு புற்றுநோய் இருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் ரத்த புற்று நோயால் பாதிக்கப்படும் 90 சதவிகித குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றனர்.   அதே நேரத்தில் இந்தியாவில் 20 முதல் 40 சதவிகிதம் குழந்தைகள் மட்டுமே குணப்படுத்தப்படுகின்றனர்.

இருந்தும் வெளிநாடுகளைவிட இந்தியாவில்தான் குழந்தைகள் ஆரோக்கியத் துடன் பிறக்கின்றன.

ஆனால் சுற்றுச்சூழல் பாதிப்பு, சத்தான உணவு கிடைக்காமல் நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இந்தத் தகவலை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்  முரளி சிந்த கும்பாலா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக