Loading

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

ஆபாசப் படம்-பயணிகள் அதிர்ச்சி

வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் பெரிய திரையில், திடீரென ஆபாசப் படம் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.


டாக்காவில் உள்ள ஹஸ்ரத் ஷாஜாலால் விமான நிலையத்தி்ல பயணிகள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென அங்குள்ள பெரிய திரையில் ஆபாசப் படம் ஓட ஆரம்பித்தது. கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் அது ஓடியது.

இதைப் பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் விரைந்து சென்று படத்தை நிறுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தைக் காட்டிய நபரை கைது செய்துள்ளதாகவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக