காஷ்மீரில் உள்ள தடுப்புக் காவல் மையங்களில் 2002 ஆண்டு முதல் 2004 வரையிலான காலக்கட்டத்தில், சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினர் 177 தடவை சென்றுள்ளனர். அப்போது, 1491 கைதிகளை சந்தித்து அவர்கள் தகவல் சேகரித்துள்ளனர்.
அதில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் குறித்து 2005-ல் செஞ்சிலுவைச் சங்கம், டெல்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளது.
காஷ்மீரில் உள்ள தடுப்புக் காவல் மையங்களில் உள்ள கைதிகள் அடிக்கப்பட்டும், உடலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டும், மேலும் பல சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டும் வருகின்றனர் என்று அந்தக் கடித்தத்தில் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது என டெல்லி தூதரகம் மூலம் அமெரிக்காவுக்கு தகவல் பரிமாறப்பட்டுள்ளது.
தாங்கள் சந்தித்த 1491 கைதிகளில் 852 பேர் மிக மோசமாக நடத்தப்பட்டதை விவரித்ததாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் 171 பேர் அடித்துத் துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர்; 681 பேர் பல்வேறு வகை சித்ரவதைகளுக்கு உள்ளாகினர் என்று புள்ளிவிவரம் பகிரப்பட்டுள்ளது.
குறிப்பாக, காஷ்மீரில் நடைபெறும் சித்ரவதைகளை இந்திய அரசு கண்டுகொள்வதில்லை என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தன்னிடம் கூறியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக