Loading

செவ்வாய், 14 டிசம்பர், 2010

பக்தி+கொடுமை=பழமை


சமீபத்தில் தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ந்த சம்பவம் இது. பார்ப்பன ஆதிக்கம் இந்தியாவில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது என்பதற்கான உதாரணமாக இந்த சம்பவத்தை கூறலாம்.
மங்களூர் அருகே உள்ள ஒரு கோவிலில், பார்ப்பனர்கள் சாப்பிட்டு முடித்த எச்சிலைகளின் மேல் தலித்துகளும், மற்ற சாதியினரும் உருண்டு செல்கிறார்கள். அப்படி சென்றால் அவர்களுக்கு தோல் சம்பந்தப் பட்ட வியாதிகள் ஏதும் வராது என்பது நம்பிக்கையாம்.
இதில் கொடுமை என்னவென்றால் இந்த பழக்கம் கடந்த 400 வருடங்களாக கடைபிடிக்கப் படுகிறது என்பதும், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் அடிக்கடி இக்கொவிலுக்கு விஜயம் செய்வது வழக்கம் என்பதும்தான். அரசுக்கு தெரிந்தே இது போல‌ மனிதர்களை சாதி ரீதியாக வர்க்கம் பிரிக்கும் முயற்சிகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்பதுதான்.
இத்தனைக்கும் அங்கே சாப்பிட்டவர்கள் யாரும் துறவிகளோ முனிவர்களோ கிடையாது. சாப்பிட்டவனும், அந்த எச்சிலையின் மேல் உருண்டவனும் ஒரே பள்ளியில் படிப்பவர்களாகவோ அல்லது ஒரே இடத்தில் வேலை செய்பவர்களாகவோ கூட இருக்கக் கூடும். இங்கே ஒருவனை உயர்ந்தவனாகவும், மற்றொருவனைத் தாழ்ந்தவனாகவும் ஆக்கி வைத்திருப்பது மனுதர்மத்தைத் தவிர வேறெதுவும் இல்லை.
சாமியார், சாமி என்பதையெல்லாம் கூட அவரவர் நம்பிக்கை சார்ந்த விஷயம் என விட்டுவிட்டாலும், இது போன்ற சம்பவங்களை எந்த அடிப்படையில் அனுமதிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் நிறைய இளைஞர்கள் இருந்தனர். உருண்டவர்களிலும்தான். இதுபோன்ற மனுதர்மம் சார்ந்த நம்பிக்கைகள் அடுத்த தலைமுறையினரிடமும் தொடர்கிறது என்பது வேதனை அளிக்கும் விஷயம்.
இந்த செய்தியில் ஒரே ஆறுதலான விஷயம், சில தலித் அமைப்பினர் இந்த பழக்கத்திற்கெதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். அதனால்தான் இந்தவிஷயம் வெளி உலகத்துக்கு தெரியவே வந்தது. இது போன்ற போராட்டங்கள் மூலம் நிச்சயம் இந்தக் கொடுமைகளை களைய முடியும் என நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் அனைவரும் சமம் என்ற நிலை வரும்.
எழுத்து: அன்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக