எப்படியாவது வீட்டில் கொண்டாடிடணும்னு அடிச்சு புடிச்சு கூட்டத்தில் நசுங்கி வந்த குடும்ப தலைவர்கள் மற்றும் இளைஞர்கள்,
ஒரு மாசம் முன்பே தீபாவளிக்கு என்னன்ன வேண்டும் என பெரிய லிஸ்டே போட்டு ஷாப்பிங் பண்ணி களைத்துப்போன குடும்ப தலைவிகள் மற்றும் பெண்கள்,
அம்மா செய்து வைத்த ஸ்வீட்லாம் எப்படி திருடி சாப்பிடலாம், என்ன டீவில என்ன ப்ரோக்ராம் பாக்கலாம், என்னன்ன பட்டாசுலாம் போடலாம் என யோசித்துக்கொண்டிருக்கும் சிறுவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்
முக்கியமான விஷயம்...
வெடி போடும் போது பக்கத்துல பக்கெட் நீர் வச்சுக்கோங்க. கம்பி மத்தாப்புலாம் கொழுத்தியதும் அதுல போட்டுடுங்க
வெடி போட்டு முடிச்சதும் வாசலில் தண்ணி தெளிச்சு விடுங்க. வெடிக்காம இருக்கும் சில வெடிகள் நாம் அசரும் நேரம் சதி பண்ணும்.
சின்ன குழந்தைகளுக்கு தகுந்த வெடிகள் மட்டும் கொடுங்க.
அவங்க வெடி போடும் போது பெற்றோர்கள் பக்கத்துல இருங்க.
பெரிய ஊதுபத்தி இல்லைன்னா ஊதுபத்தியை ஒரு குச்சியில் கட்டி அதன் மூலம் வெடி போடுங்க.
சில புஸ்வானம் அழுத்தத்தின் காரணமா திடீர்ன்னு வெடிக்கும். கவனம் தேவை.
புதுசா மார்க்கெட்ல வந்த வெடி என்றால் அதை பற்றி நல்லா விஷாரிச்ச பிறகு வாங்குங்க.
அஜீரணத்துக்கு போடும் மாத்திரை, டானிக் எல்லாம் ரெடியா வச்சுக்கோங்க.
தீபாவளிக்கு பிறகு ஒரு வாரம் ரசம் சாப்பிடுங்க :)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக