Loading

செவ்வாய், 26 அக்டோபர், 2010

அமெரிக்கச் சிறைச்சாலை பற்றித் திடுக்கிடும் தகவல் வெளியிடும்


கியூபாத் தீவின் வட முனையில் அமெரிக்கா தீவிரவாதிகளை அடைத்து வைக்கும் சிறைச்சாலையை நிறுவியுள்ளது இது குவன்தனாமோ குடாச் சிறைச்சாலையை என்று அழைக்கப்படுகிறது அமெரிக்க ஐனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட இடம் என்ற மறு பெயரும் அதற்கு உண்டு.
பாக்கிஸ்தான், அப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் பிடிக்கப்பட்ட முஸ்லிம் தீவிரவாதிள் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் பலர் நெடுநாள் நீதி விசாரணை இன்றிப் பல்வேறு சித்திரவதைகளுக்கு உடபட்ட நிலையில் இங்கு வாடுகின்றனர் தீவிரவாதிகளைப் பிடித்துக் கொடுப்போருக்கு பரிசுத்  தொகைத் திட்டத்தை ஜோஜ் புஷ் நிர்வாகம் அறிவித்த பிறகு பல அப்பாவிகள் குவன்தனாமோவுக்குவந்து சேர்ந்துள்ளனர்
இப்படியான முறையில் ஆறு வரடங்கள் வெலவிட்ட வெள்ளை அவுஸ்ரேலியர் டேவிற் வறக்ஸ் எழுதிய சிறை வாழ்க்கை நூல் நேற்று சிட்னியில் வெளியிடப்பட்டுள்ளது அவுஸ்ரேலியச் சட்டப்படி குற்றத்திற்காகச் சிறையிருந்த ஒருவர் புத்தகம் எழுதிப் பணம் சம்பாதிக்க முடியாது
எனவே குவன் தனாமோ, என் வாழ்க்கைப் பயணம் என்ற டேவிற் வறிக்ஸ் நூல் அவருடைய உள்ளக் குமுறலை மாத்திரம் வெளியிட உதவுகிறது 2001ம் ஆண்டில் அவர் அப்கானிஸ்தானில் பிடிபட்டார் தனக்குநாட நாடாகத் திரிய வேண்டும் என்ற கட்டங்காத ஆவல் என்று தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார்
அவர் ஐப்பானில் பந்தயக் குதிரைகளைப் பராமரிக்கும் தொழில் பார்த்திருக்கிறார் அங்கு சந்தித்த ஒரு இஸ்ரேயில் யூதனோடு பயணம் செய்து காஷ்மீர் வந்தார் அந்த நாட்டு மக்களின் விடுதலைக்கு உதவுவது அவருடைய நோக்கம் அதன் பின் அப்கானிஸ்தான் வந்தார்
இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு தலிபான்களைக் கொல்வதற்கு ஜோஜ் புஷ் அனுப்பிய அமெரிக்கப் படைகள் அவரைக் கைது செய்து குவன்தனா மோவுக்கு அனுப்பின சர்வதேச ஊடகங்கள் அவரை அவுஸ்ரேலியாவின் தலிபான்காறன் என்று இன்ற வரை அழைக்கின்றன
ஒரு ஐனநாயக நாடு என்னவகையான காட்டுமிராண்டிச் சித்திரவதைகளை ஈவிரக்கமின்றிச் செய்கின்றது என்பதைக் கூறும் நூல் என்று டேவிற் வறக்ஸ் எழுதிய வாழ்க்கைப் பயணப் புத்தகம் விமர்சிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக