மோட்டார் சைக்கிளுக்கே ஹெல்மெட் அணிய மாட்டோம். சைக்கிளுக்கு அணிந்து செல்வோமா என்பவரா நீங்கள். சிகையலங்காரம் குலைந்து விடும், தலை பாரமாக இருக்கும் என ஏகப்பட்ட காரணங்களை நீங்கள் கூறலாம்.
உங்களுக்காக ஒரு புதிய கண்டுபிடிப்பு. நீங்கள் ஹெல்மெட்டே அணியதேவையில்லை. விபத்திலும் சிக்கத்தேவையில்லை. காரில் செல்லும் போது, அடிபட நேர்ந்தால் எப்படி ஸ்டியரிங்கில் இருந்து காற்றுப்பலூன் வெளிவந்து உங்கள் தலையை பாதுகாக்கிறதோ அது போல ஒரு புதிய கண்டுபிடிப்பு சைக்கிள் பாவனையாளர்களிடம் வரப்போகிறது.ஸ்வீடன் நாட்டின் இரு ஆடை கைத்தொழில் மாணவர்கள் உருவாக்கிய புதிய உடையில் இருக்கும் கொல்லெர், மற்றும் காற்று நிரம்பிய பலூன்கள் தலைக்கு பின்னாலிருந்து 0.1 செக்கனில் விரிவடைந்து உங்கள் உயிரை காப்பாற்ற கூடியது.
21ம் நூற்றாண்டின் இன்னுமொரு மிக அசாத்தியமான கண்டுபிடிப்பாக இதை வர்ணிக்கிறார்கள். இந்த சைக்கிள் ஹெல்மெட்டுக்களுக்கு வைத்திருக்கும் பெயர் 'Hwding'
அன்னா ஹபுட் எனும் இதன் உருவாக்குனர், அடுத்த வருடம் இங்கிலாந்து, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த ஹெல்மெட் பொருத்தப்பட்ட ஆடைகள் சந்தைப்படுத்தப்படும் என்கிறார்.
260 யூரோ வரை மதிப்பிடப்பட்டுள்ளது. திடீரென பலத்த அதிர்வு ஏற்பட்டால் மட்டுமே இந்த ஹெல்மெட் உணர்ந்து தன்னை விரித்துக்கொள்ளும்.

100ற்கு மேற்பட்ட சைக்கிள் விபத்துக்களை பார்த்து, பார்த்து, இந்த ஆடையை வடிவமைத்திருக்கிறார்கள். இனி நீங்கள் சைக்கிளில் செல்லும் போது தலைக்கு கவசம் பொருத்த தேவையில்லை. இதை அணிந்தால் போதும். ஒரு குளிர்கால ஆடை போல அழகாக காட்சியளிக்கிறது இந்த புதியவகை ஆடை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக