Loading

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

நுரையீரல் நோய் ஆபத்து அதிகரிப்பு !

 இந்தியாவில் நுரையீரல் நோய் அதிகரித்து வருகிறது பெரும் கவலை அளிப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மும்பை, மற்றும் தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி, திருச்சி, திருநெல்வேலி , உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இது போன்ற புழுதி பெரும் சுகாதாரக்கேட்டை ஏறுஞூபடுத்தி வருகிறது.

சாலைகளில் கிளம்பும் புழுதி புயல் மற்றும் வாகன புகை அனைவரது நுரையீரலையும் நேரிடையாக பாதிப்பதால் பலர் நோய்வாய்ப்படுகின்றனர். மும்பையில் 45 சதவீத போக்குவரத்து போலீசார் பலர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஒரு போலீஸ்காரர் கூறுகையில் நான் கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக புழுதி கிளம்பும் காலை பகுதியில் பணியாற்றி வருகிறேன். இதனால் எனது தலையில் வழுக்கை, இருமல் மற்றும் தோல்நோய் , ஏற்பட்டுள்ளது. இது குறித்து டாக்டரிடம் கேட்ட போது ரோடுகளில் எழும் புழுதியே எனது நோய்க்கு காரணம் என தெரிவித்தார்.

இந்தியாவில் நாள்தோறும் பலர் வீதம் 100 மில்லியன் பேர் இந்த நுரையீரல் நோய்காரணமாக பாதிக்ப்பட்டுள்ளனர் . இந்த ஆண்டில் பலர் இந்த நோய் காரணமாக மரணத்தை தழுவ நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சாலைப்பகுதியில் செல்லும்போது அனைவரும் முககவசம் அணிவது நல்லது என டாக்டர்கள் இப்போது பரிந்துரைத்து வருகின்றனர். 

Dinamalar - No 1 Tamil News Paper

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக